கோவைக்காயை சுத்தம் செய்து ஆவியில் வேக வைத்து எடுத்து கொள்ளவும். மெல்லிய சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து எடுக்கவும்.
பின்பு அதே எண்ணெயில் கோவைக்காயை சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து வேகும் வரை வதக்கவும். புளியை சேர்த்து ஒரு முறை புரட்டி எடுக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், வறுத்து வைத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும். கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து இதில் சேர்த்தால் கோவைக்காய் துவையல் தயார்.