முதலில் அரிசியை வேகவைத்து உதிரிஉதிரியாக வடித்து கொள்ளவும். எண்ணெய், பட்டர் காயவைத்து அதில் பட்டை, கிராம்பு இட்டு வெடித்ததும் பூண்டு சேர்க்கவும். அதன் பின் வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்பு குடைமிளகாயை மீடியமாக வதக்கி எடுத்து கொள்ளவும்.
காலிப்பிளவர், ப்ரொக்கலி, முட்டை கோஸ் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். அஜினோமொடொ மர்றும் காய்கறிகள் நன்கு வதங்கிய பின் சிறிது உப்பு சேர்க்கவும். குடைமிளகாயை மற்றும் காய்கறிகளின் தண்ணீர் வற்றியதும் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பிறகு வேகவைத்த சாதம், உப்பு, எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், கொத்தமல்லி இலையை போட்டு நன்கு கிளறி சிம்மில் வைத்து இறக்கவும். சுவையான வெஜ் பிரைடு ரைஸ் தயார்.