உருளைக்கிழங்கு - 100 கிராம்
பீன்ஸ், பட்டாணி, காரட், காலிபிளவர் - 1/4 கிலோ
* இஞ்சி, பூண்டு இரண்டையும் லேசாக அரைத்துக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், புதினா இவைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* காரட், பீன்ஸ், காலிபிளவர் இவைகளை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
* வாணலியில் தேவையான அளவு நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, அரைத்த இஞ்சி, பூண்டு விழுதைப்போட்டு வதக்கவும்,
* அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினாவை சேர்த்து வதக்கி, வதங்கியதும் நறுக்கிய காய்கறிகளையும், பட்டாணியையும் போட்டு அரிசி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.