பயனுள்ள சில வீட்டு உபயோக குறிப்புகள்...!

Webdunia
தரையைத் துடைக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு துடைக்க, ஈக்கள் பறந்தோடும். தொந்தரவில்லாமல் துடைக்கலாம்.
டீத்தூளை வேண்டுமளவு எடுத்து முதல் நாள் இரவில் தூங்குமுன் அரைடம்ளர் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு.  அடுத்தநாள் அதை டீ வைக்கும் போது பாலுடன் கலக்கினால் நல்ல மனமாகவும், திடமாகவும், ருசியாகவும் இருக்கும்.
 
பூசணிக்காய் சாற்றில் தங்க நகைகளை உர வைத்து கழுவினால் அவை நன்றாகப் பளிச்சிடும்.
 
மருதாணியால் ஆடையில் ஏற்படும் கறைகளை போக்க, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து பின் சோப் போட்டு அலசினால் கறை போய்விடும்.
 
ஊதுபத்தியை ஏற்றுவதற்கு முன் நீரில் நனைத்து பின்பு காற்றில் உலரவிட்டு ஏற்றினால் அதிக மணமாகவும் இருக்கும் நன்றாகவும் எரியும்.
 
பட்டுச் சேலைகளைத் துவைக்கும்போது அலசும் நீருடன் சிறுது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் சாயம் போகாது. மங்காது. பட்டுச் சேலையும் பளிச்சிடும்.
 
ஒரு சிறுகரண்டி வினிகரில் மூன்று கரண்டி தண்ணீரை கலந்து ஜன்னலை துடைத்தால் போதுமானது. ஜன்னல் பனிச்சிடும். துருக்கல் அண்டாது.
 
மாமிச உணவுகளை விரைவாக வேகவைக்க அதனுடன் சிறிது பப்பாளியை சேர்த்தால் போதும் கறி பூப்போல வெந்துவிடும்.
 
கேஸ் ஸ்டவ்வை எளிதாக சுத்தம் செய்ய எலுமிச்சை பழத்தை ஒரு கப் வெந்நீரில் கலந்து ஸ்டவ்வின் மீது தெளித்துவிட்டு பின்னர் அழுத்தி துடைக்கவும்.  பளிச்சென்று கேஸ் ஸ்டவ் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்