ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆடவர் 74 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்த பிரிவில் இறுதிப்போட்டி நடந்தது. இதில் இந்திய வீரர் சுஷில் குமார் தங்கப்பதக்கம் வென்றார். இவர் ஏற்கனவே கடந்த 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் தற்பொழுது வரை இந்தியா 14 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்கள் பெற்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது