வீடுதேடி வரும் பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள்: அரவிந்த் கெஜ்ரிவால் அசத்தல்

வெள்ளி, 1 ஜூன் 2018 (20:58 IST)
முனிசிபல் மற்றும் கார்ப்பரேசன் அலுவலகங்களுக்கு சென்று பிறப்பு சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் வாங்க வேண்டும் என்பது பொதுமக்களுக்கு ஒரு பெரிய வேலையாக இருந்து வருகிறது. இதில் அதிகாரிகள் லஞ்சமும் தலைவிரித்தாடுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.
 
இந்த நிலையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்பட 40 விதமான அரசு சேவைகளை வீடுகளுக்கே சென்று அளிக்கும் திட்டத்தை டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அறிமுகம் செய்யவுள்ளது.
 
ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு மாற்றம் செய்தல், திருமண சான்றிதழ், குடிநீர், கழிவுநீர் இணைப்பு, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் போன்ற 40 வகையான சான்றிதழ் பெற இனிமேல் பொதுமக்கள். இணையதளத்தில் தேவையான தகவல்களுடன் விண்ணப்பித்தால் போதும்.
 
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதன் பின்னர் அதிகாரிகள் குழு விண்ணப்பம் செய்தவர்களின் வீடுகளுக்கே செல்லும். அப்போது புகைப்படம் எடுப்பது, கைரேகை பெறுவது, ஆவணங்களை சரிபார்ப்பது ஆகிய நடைமுறைகளுக்கு பின்னர் சான்றிதழ்கள் வழக்கப்படும். இதற்காக, தனியார் ஏஜென்சிகளையும் பயன்படுத்த டெல்லி அரசு திடடமிட்டுள்ளது.
 
இந்த புதிய வசதி இம்மாதம் இறுதியில் தொடங்கப்படும் என்று கூறியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்