இந்த நிலையில், யாரும் எதிர்பாரத வண்ணம் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, சென்னையில் பல்வேறு பகுதிகளில் வேன் மூலம் திடீர் தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து, முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்திற்கு போட்டியாக, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்.