புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு இல்லாததால் இப்போது பாமக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. 15 தொகுதிகளில் போட்டியிடும் பாமக முதல்கட்டமாக 9 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.