துலாம் - மாசி மாத பலன்கள்

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:10 IST)
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்) - கிரக நிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய  ஸ்தானத்தில் சுக்ரன், சனி - சுகஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் -  அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
 
வாக்கு வன்மை பெற்றிருக்கும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை  சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கை  கண்டு பொறாமை  உண்டாகலாம் கவனம் தேவை.  எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.
 
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது  கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர் கள் அலைச்சலையும்,  வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.
 
குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும் படியாக இருக்கலாம். நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சனை  ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கைத் துணை ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
 
பெண்களுக்கு சாதூர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
 
மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி  இருக்கும்.
 
கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும்.  கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அலட்சிய போக்கை கைவிடுவது நல்லது.
 
அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும்.  செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.
 
சித்திரை 3, 4 பாதம்:
 
இந்த மாதம் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன் வாங்க நேரிடும். முடிந்தவரை  ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது உத்தமம். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகள் உண்டாவதைத்  தவிர்க்கலாம்.
 
சுவாதி:
 
இந்த மாதம் வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச்  செயல்படுவது நல்லது. முடிவில் நல்லதொரு சாதகமான சூழ்நிலை ஏற்படும்.
 
விசாகம் 1, 2, 3ம்  பாதம்
 
இந்த மாதம் பணவிஷயத்தில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதும், வாக்குறுதிகளைக் கொடுப்பதும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.  வம்பு வழக்குகள் உண்டாகும். கொடுக்கல் - வாங்கலில் மிகவும் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள்.
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
 
அதிர்ஷ்ட தினங்கள்: மார்ச் 5, 6, 7
 
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி13, 14; மார்ச் 13, 14.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்