மகரம்: ஆவணி மாத ராசி பலன்கள் 2021

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (18:01 IST)
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்) - கிரகநிலை: ராசியில்  சனி (வ) -  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம  ஸ்தானத்தில் ராஹூ -  அஷ்டம  ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் -  பாக்கிய  ஸ்தானத்தில் சுக்ரன் -  லாப  ஸ்தானத்தில் கேது, சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
உழைப்பு அதிகமாக இருக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.
 
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.  வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும்.  கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.
 
தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை  செய்து முடித்து நன்மை பெறுவீர்கள். கேட்ட பண உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.
கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
 
அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.
 
பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.
 
உத்திராடம்:
இந்த மாதம் தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்வார்கள். எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும். வியாபாரிகள் சிலர் வெளிநாட்டில் கிளைகள் தொடங்குவார்கள்.  கலைத்துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும்.  உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு உயரும்.
 
திருவோணம்:
இந்த மாதம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன சேர்க்கை ஏற்படும். சகோதரர்கள் மத்தியில் ஒற்றுமை கூடும். சொத்துப் பிரச்சினையில் நல்ல முடிவு வரும். வழக்குகள் சாதகமாகும்.  திருமணம் நடத்துவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். வேலைசெய்யும் பிள்ளைகள் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வார்கள்.
 
அவிட்டம்:
இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் வந்துசேரும். தொழிலதிபர்கள் தொழிலை அபிவிருத்தி செய்வார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெற்றோர்களால் பாராட்டப்படுவார்கள். நீண்டகாலமாக இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் நல்ல தீர்வுக்கு வரும்.
 
பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க எல்லா நலனும் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: செப் 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 30, 31.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்