கடகம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்

வியாழன், 20 செப்டம்பர் 2018 (13:35 IST)
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்). கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த  சூரிய பகவான் தைரிய, வீர்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதிதைரிய, வீர்ய ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் சுகஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு சுக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பூர்வ, புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர்  11ந்தேதி சுக ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.
 
பலன்: சக ஊழியர்களின் ஒத்துழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் கடக ராசி அன்பர்களே!. இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி உண்டாகலாம்.  கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற  எண்ணம் மேலோங்கும்..
 
குடும்பாதிபதி சூரியன் தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கணவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இளைய சகோதரர்கள் உங்கள் பேச்சுக்கு  முக்கியத்துவம் கொடுப்பார்கள். பிள்ளைகளின் கல்வி நலனுக்காக ஒரு தொகை செலவிட நேரலாம்.
 
தொழில் ஸ்தானத்தை புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின்  பார்வை இருப்பதால் பணவரவு எதிர்பார்ப்பதை விட அதிகமாக இருக்கும். வெளியூர்,  வெளிநாடு பயணங்கள் சென்றுவர வேண்டியிருக்கும்.
 
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கண்டிப்பாக உண்டு. மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இருந்த மனக்கசப்புகள் நீங்கி நல்லுறவு ஏற்பட வாய்ப்புண்டு.
 
பெண்கள் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சில முக்கிய காரியங்கள் குடும்பத்தில் உங்கள் மூலமாக நடப்பதற்கு வாய்ப்புண்டு.
 
மாணவச் செல்வங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கப் பெறும். தொழில் படிப்புகள் படிப்பவர்களுக்கு நல் எதிர்காலம் உண்டு.
 
கலைத்துறையினருக்கு அதிர்ஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய கால கட்டம். ஆபரணச் சேர்க்கை உண்டு. பணம் பலவகைகளிலும் வரும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உடனிருப்போரின் தொந்தரவு அதிக கவனம் தேவை.
 
அரசியல்வாதிகள் வழக்கு, விவாதங்களில் கவனம் தேவை. உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மீது சந்தேகம் வரலாம். ஆனால் அது உண்மை இல்லை  என்று தெரிய வரும். சிலர் மீது கோபப் பட வேண்டி வரும். கோபத்தை கட்டுப்படுத்தினால் மகிழ்ச்சி அடையலாம்.  
 
புனர் பூசம் 4ம் பாதம்: இந்த மாதம் காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம்  செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
 
பூசம்: இந்த மாதம் தடை தாமதம், வீண் அலைச்சல் இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது. பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின்  இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள்.  அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும்  மனநிலை ஏற்படும்.
 
ஆயில்யம்: இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி  எதிர்பார்த்தபடி  கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும்.
 
பரிகாரம்:  சித்தர்கள் ஜீவ சமாதியை வழிபட்டு தியானம் செய்யுங்கள்.
 
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 22, 23,24.
 
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 17; அக்டோபர் 12, 13, 14.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்