கடகம்: மார்கழி மாத ராசி பலன்கள்

கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில்  செவ்வாய் -  பஞ்சம ஸ்தானத்தில்  புதன் - ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்,  குரு, சனி, கேது -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரக மாற்றங்கள்:
 
17-Dec-19 அன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
21-Dec-19 அன்று பகல் 2.54 மணிக்கு  புத பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
28-Dec-19 அன்று பகல் 12.45 மணிக்கு செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
07-Jan-20 அன்று மாலை 4:25 மணிக்கு  புதபகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
10-Jan-20 அன்று இரவு 8:22 மணிக்கு  சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
மனசாட்சிகாரகன் சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச்  செயலாற்றுவீர்கள். 
 
குடும்பத்துடன் தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு, பலருக்குக் கிடைக்கும். உடல்  உபாதைகள் ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகள் பளிச்சிடும். குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பீர்கள். அதேநேரம்  அவர்களின் மகிழ்ச்சிக்காக சுற்றுலாவும் சென்று வருவீர்கள். பதற்றப்படாமல் உங்கள் செயல்களை செய்து முடிப்பீர்கள். 
 
தொழில் செய்பவர்களுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும் எதிலும் கவனமாக இருக்கவும். புதிய  முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே வாங்கி விற்கவும். அதேசமயம்  சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைய நிறையவே வாய்ப்புகள் உள்ளன. 
 
உத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். இதனால் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கிப் பணியாற்ற  வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும்.
 
அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள்  கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால்  உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். 
 
கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 
 
பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி  மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம். மனதைக் கட்டுப்படுத்த யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்தால்,  கவலைகள் தேவையற்றவை என்பது தன்னால் புரியும். 
 
மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன்  பாடங்களைப் படிக்கவும். 
 
புனர் பூசம் 4ம் பாதம்:
 
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச் சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.  பணவரத்து திருப்தி தரும்.
 
பூசம்:
 
இந்த மாதம் வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.  எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.  தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை.
 
ஆயில்யம்:
 
இந்த மாதம் மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம்  ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம்.  எதிர்பார்த்த பணவரவு இருக்கும். 
 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று வேப்பிலை அர்ப்பணித்து வழிபட்டு வர பொருளாதார தேக்கநிலை மாறும்.
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 31; ஜனவரி 1
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 24, 25.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்