ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, இன்று மகளிர் மட்டும் படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் சூர்யா கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.