இந்த நிலையில் ஒரு சிலர் யோகி பாபு ஓரிரு காட்சிகளில் மட்டும் நடித்த பழைய திரைப்படங்களை தூசி தட்டி, யோகி பாபு ஹீரோவாக நடித்தது போன்ற தோற்றத்தை உருவாக்கி விளம்பரம் செய்து வருகின்றனர். இதற்கு யோகி பாபு கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
தயவுசெய்து நான் ஓரிரு காட்சிகளில் நடித்த படங்களை புதிய ஹீரோவாக நடித்தது போல் விளம்பரம் செய்யாதீர்கள். நான் எவ்வளவு காட்சிகளில் நடித்திருக்கிறேன் என்பதை கூறி விளம்பரம் செய்யுங்கள். குறிப்பாக ’தெளலத்’ என்ற படத்தில் நான் சில காட்சிகளில் மட்டுமே நடித்து உள்ளேன். ஆனால் நான்தான் ஹீரோ என்பது போல் அதில் சோலோ போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த படத்தின் உண்மையான ஹீரோ சிவன்
இவ்வாறு நான் ஓரிரு காட்சிகள் நடித்த திரைப்படங்களை ஹீரோவாக நடித்தது போல் விளம்பரம் செய்வதால் நான் உண்மையாகவே ஹீரோவாக நடித்து வரும் படங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே தயாரிப்பாளர் வினியோகஸ்தர் ரசிகர்கள் பலர் எனக்கு போன் செய்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர். எனவே இப்படியெல்லாம் தயவு செய்து ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம் என்று யோகிபாபு அந்த வீடியோவில் கூறியுள்ளார்