இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தன்னைத் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகள் கூறி திட்டியதோடு மட்டுமின்றி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தயாரிப்பாளர் அலாவூதின் என்பவர் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விஷாலை கைது செய்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்