நேற்று மாலை, பாண்டிராஜ் இயகக்த்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துவரும் சூர்யா40 படத்தின் தலைப்பு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்படத்திற்கு எதற்கும் துணிந்தவன் எனப் பெயரிட்டுள்ளனர்.
மேலும், ஜெய்பீம் பட போஸ்டர் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தி மொழியில் மட்டும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டால் இது பான் இந்தியா படமாக வெளியாக வாய்ப்புள்ளது எனவும்கூறுகின்றனர்.
ஏற்கனவே சூர்யாவின் சூரரைப் போற்று படம் அமேசான் ஓடிடியில் வெளியான நிலையில், ஜெய்பீம் படமும் ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்கில்தான் ரிலீசாகும் எனக் கூறப்படுகிறது.