நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத நடிகர் விஷாலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் எடுக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவவம் லைகா. இந்த நிறுவனத்திற்கு விஷால் தர வேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை நீதிமன்றத்திற்குச் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், நடிகர் விஷால் இதுவரை செலுத்தாத காரணத்தால் சமீபத்தில், அவரது மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆவணங்கள் தாக்கல் செய்யாததால் விஷால் ஆஜராக வேண்டும் எனவும், ரூ. 15 கோடி செலுத்த நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என தனி நீதிபதி, விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார்.
மேலும், நீதிமன்றத்தில் அனைவருமமெப்படி கருதப்படுகிறறார்களோ அப்படித்தான் நடிகர் விஷாலும் கருதப்படுவார். நீதிமன்றத்தை விட தான் பெரியவன் என நினைத்துக் கொள்ள வேண்டாம் என லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் விஷாலுக்கு நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.