ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
சமீப நாட்களாக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கி முழு நேரமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடலை படு ஒல்லியாக்கி வைத்திருக்கிறார். மூச்சு திணற திணற ஒர்க் அவுட் செய்து இப்படி பண்ணலன்னு யாரு அடிச்சாங்க...? போதும் இத்தோட நிறுத்திக்கோங்க... அது தான் உங்களுக்கும் நல்லது உங்கள உடலுக்கும் நல்லது என ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.