கச்சிதமான திரைக்கதை, வித்தியாசமான களம், மினிமம் பட்ஜெட் என்று தமிழ் சினிமாவில் அட்டகத்தி மூலம் புதிய பாதையை உருவாக்கியவர் சி.வி.குமார். த்ரில்லர், ரொமான்ஸ், காமெடி, ஹாரர் என்று பல்வேறு ஜானர்களில் படங்கள் தயாரித்தவர் முதல்முறையாக இன்று நேற்று நாளை படத்தின் மூலம் சயின்ஸ் ஃபிக்ஷனையும் முயற்சி செய்கிறார்.