கட்டா குஸ்தி இயக்குனரோடு மூன்றாவது முறையாக இணையும் விஷ்ணு விஷால்!

vinoth
புதன், 24 ஜனவரி 2024 (07:07 IST)
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘கட்டா குஸ்தி என்ற திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் ரிலீஸான இந்த படம் அதன் பின்னர் பார்வைகளைக் கவர்ந்தது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள விஷ்ணு விஷால் இந்த படத்தின் வியாபாரம் 30 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த ஹிட்டையடுத்து தனுஷின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் இயக்குனர் செல்லா அய்யாவு. இந்த படத்தை மதுரை அன்புச்செழியன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் செல்லா சொன்ன கதையில் தனுஷுக்கு திருப்தி ஏற்படாததால் அந்த படம் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை.

இந்நிலையில் இப்போது விஷ்ணு விஷால் நடிப்பில் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் செல்லா. இதன் மூலம் மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்