விஷ்ணு விஷால் நடிப்பில் மனு ஆனந்த் இயக்கும் எஃப் ஐ ஆர் படம் பற்றிய அறிவிப்புகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளியாகின. ஆனால் கொரோனா மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாக அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஷ்ணு விஷால் படம் பற்றி சில மாதங்களுக்கு முன்னர் டிவிட்டரில் படத்தின் முதல் காப்பி முடிந்துவிட்டது. திரையிட்டுக் காட்டியவர்கள் எல்லாம் நல்ல விமர்சனங்களைக் கொடுத்துள்ளனர். நடிகராகவும், தயாரிப்பாளராகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்களிடம் எங்கள் பயணத்தைக் காட்ட ஆர்வமாக இருக்கிறோம். விரைவில் அறிவிப்புகள் வரும் எனக் கூறியுள்ளார்.