சீயான் விக்ரம் ரசிகர் மன்றத்தில் உள்ள நிர்வாகிகள் இடையே சாதி மற்றும் மதம் குறித்த பிரச்சனைகள் இருந்து வருவதாக சமூக வலைதளங்களில் வெளிவந்த செய்தியை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அகில இந்திய விக்ரம் ரசிகர் மன்ற தலைவர் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சியான் விக்ரம் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்றங்கள் எந்தவித ஜாதி, மதம் மற்றும் அரசியல் சார்ந்து செயல்படக்கூடாது. மதம், ஜாதி மற்றும் அரசியல் சம்மந்தமில்லாமல் அண்ணன் சியான் விக்ரம் அவர்களின் ரசிகர்கள் என்ற எண்ணத்தில் மட்டும் ரசிகர்கள் செயல்பட வேண்டும். இதற்கு மாறாக மதம், ஜாதி மற்றும் அரசியல் சம்பந்தப்படுத்தி அதன் தலைவர்களை சம்பந்தப்படுத்தும் ரசிகர்கள் என்ற பெயரில் வெளியிடப்படும் செய்திகள் நமது கொள்கைகளுக்கு எதிரானவை மற்றும் கடும் கண்டனத்துக்கு உரியது