தமிழக கிரிக்கெட் அணியில் நடிகர் விக்ராந்த் மகன்: குவியும் கோலிவுட்டின் வாழ்த்து..!

Siva
ஞாயிறு, 21 ஜனவரி 2024 (15:45 IST)
14 வயதுக்குட்பட்ட தமிழக கிரிக்கெட் அணியில் நடிகர் விக்ராந்த் மகன் தேர்வு செய்யப்பட்டதை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
மேலும் கோலிவுட் பிரமுகர்கள் பலர் விக்ராந்த் மகனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விக்ராந்த் இயல்பாகவே கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ளவர் என்பதும் அவர் சிசிஎல் கிரிக்கெட் உள்பட ஒரு சில கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நடிகர் விக்ராந்த் மகன் யாஷு  சிறு வயது முதலே கிரிக்கெட் ஆர்வம் கொண்டிருந்த நிலையில் தற்போது 14 வயதுக்குட்பட்ட தமிழக கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார் 
 
தனது மகன் கிரிக்கெட்டில் பிரபலமாக வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்றும் அந்த கனவு கண்டிப்பாக ஒருநாள் நிறைவேறும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து விக்ராந்த் மகனுக்கு பல திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்