’விக்ரம் வேதா’ இந்தி படம் குறித்த மாஸ் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர்!
வியாழன், 22 செப்டம்பர் 2022 (19:13 IST)
விஜய் சேதுபதி மாதவன் நடித்த விக்ரம் வேதா என்ற திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
தமிழில் இந்த படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி ஹிந்தியிலும் இயக்கி வருகின்றனர் என்பதும் ஹிரித்திக் ரோஷன் மற்றும் சயிப்அலிகான் ஆகிய இருவரும் விஜய் சேதுபதி மாதவன் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்புக்கு இசை அமைத்த சாம் சிஎஸ் இந்திப் பதிப்புக்கு இசையமைத்து வருகிறார் என்றும் இந்த படத்தின் பின்னணி இசை பணியை அவர் முழுவதுமாக முடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.