விக்ரமின் ‘மஹான்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (13:53 IST)
விக்ரம் நடித்த ‘மஹான்’ திரைப்படமோ ஓடிடியில் வரும் பிப்ரவரி மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணிபோஜன் உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘மஹான்’ 
 
இந்த படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாரான போதிலும் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது ‘மஹான்’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் பிப்ரவரி 10ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த போஸ்டரும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்