ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருந்த விஜயகாந்த்… ஆனால் தடுத்து நிறுத்திய நபர்!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (13:58 IST)
விஜயகாந்த் தன் திரைவாழ்க்கையில் சில படங்களில் மட்டுமே வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் வில்லனாக தனது கேரியரைத் துவங்கிய விஜயகாந்த், அதன் பின்னர் ஹீரோவானார். அதன் பின்னர் ஒரு கட்டத்தில் அவருக்கு ஹீரோவாக தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாத போது அவரை ஏவிஎம் நிறுவனம் ரஜினியின் முரட்டுக் காளை படத்தில் வில்லனாக (ஜெய் சங்கர் நடித்த பாத்திரம்) நடிக்க அழைத்துள்ளார்கள்.

விஜயகாந்தும் அந்த அழைப்பை ஏற்று நடிக்கலாம் என்ற முடிவை எடுத்த போது விஜயகாந்தின் நண்பரான இப்ராஹிம் ராவுத்தர், விஜயகாந்தை நடிக்கக் கூடாது என தடுத்துவிட்டாராம். மேலும் ஒரு படத்தில் வில்லனாக நடித்துவிட்டால் தொடர்ந்து வில்லன் வேடங்களாகவே வரும் எனக் கூறி அவரை அந்த படத்தில் நடிக்க விடாமல் தடுத்து விட்டாராம்.

அதன் பின்னர் விஜயகாந்த் கதாநாயகனாக 25 வருடங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகனாக வலம்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்