தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் சென்னை -28, மங்காத்தா, மாநாடு, மாஸ், பிரியாணி,கஸ்டடி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இதற்கான பதிலாக சில நாட்களுக்கு முன்பு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் விஜய்68. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், விஜய் பிறந்த நாள் வரும் ஜூன் 22 ஆம் தேதி என்பதால், அன்று விஜய் 68 பட அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய்- வெங்கட்பிரபு படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தமிழகம், இந்தியாவைத் தாண்டி மலேசியாவிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, மலேசியாவில் ஒரு பகுதியில், விஜய்68 பட பேனர் ஒன்று இடம்பெற்றுள்ளது.