இன்றைய தமிழ் சினிமாவில் படு பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் இடைவிடாது நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் சீனுராமசாமியின் இயக்கத்தில் உருவாகும் "மாமனிதன்" படத்தில் ஆட்டோ ஓட்டுனராக நடிக்கிறாராம்.
வொய்.எஸ்.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படமான மாமனிதன் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். ஜோக்கர் பட புகழ் குரு சோமசுந்தரம் விஜய் சேதுபதியின் நண்பராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆண்டிப்பட்டியில் துவங்கியது.
40 நாட்கள் படப்பிடிப்பை நடத்திவிட்டு அதன் பிறகு கேரளா, காசி, ராமேஸ்வரத்திற்கு செல்கிறார்கள் படக்குழுவினர். படத்திற்கு இசைஞானி இளையராஜாவும், யுவுனும் சேர்ந்து இசையமைக்கிறார்கள் என்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது. .