நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக சந்திப் கிஷான் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் என்ற படத்தை இயக்கிய ரஞ்சித் கொடியின் அடுத்த படத்தில் சந்திப்கிஷான் நாயகனாக நடிக்கிறார். தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதியின் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் அவர் ஒரு அதிரடி ஆக்ஷன் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது
இந்த படத்திற்கு மைக்கேல் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே விஜய் சேதுபதி பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தனது நண்பரும் ரஞ்சித் ஜெயக்கொடிக்காக இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Happy to be part of my dear most Director @jeranjit s ❤️ Film