மதுரை சிறைக் கைதிகளுக்கு 1000 புத்தகங்களை வழங்கிய விஜய் சேதுபதி!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (08:50 IST)
விஜய் சேதுபதி தற்போது தமிழ் மொழி தாண்டியும் இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழிலும் அவர் வில்லனாக பல படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் மட்டும் தோல்வி அடைந்து வருகின்றன.

சினிமா தாண்டியும் பல பொது சேவைகளில் விஜய் சேதுபதி ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது மதுரை சிறையில் உள்ள பொது நூலகத்துக்காக அவர் 1000 புத்தகங்களை இலவசமாக வழங்கியுள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

முன்னதாக இதுபோல சென்னை புழல் சிறைக்கும் சிறப்பு நூலகத்துக்காக புத்தகங்கள் நன்கொடை பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்