வலிமை படத்தில் விஜய் சேதுபதியின் மகனா? வெளியான ரகசியத் தகவல்!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (19:44 IST)
நாளை வெளியாக உள்ள வலிமை திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் நாளை வெளியாக உள்ளது. கடைசியாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெளியாகி இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உள்ளது. இதுவரை வெளியான அஜித் படங்களின் வசூல் சாதனைகளைக் கண்டிப்பாக வலிமை முறியடிக்கும் என பேசப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் படக்குழு இதைப் பற்றி எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்