விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3- வது முறையாக உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அரசியல் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் ராதாரவி வில்லன் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.