தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லியோ. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் மற்றும் திரிஷா என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கில் நா ரெடிதான், 2 வது சிங்கில் படாஸுதான் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் 3 வது சிங்கில் அன்பெனும் என்ற லிரிக் வீடியோ இன்று ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது.
அதன்படி இன்று மாலை இப்பாடல் ரிலீஸாகியுள்ளது.
இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் லோதிகா இருவரும் பாடியுள்ளார். விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. வெளியான 20 நிமிடங்களில் இப்பாடல் 6 லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் பெற்றுள்ளது.