விஜய்யின் புதிய படத்தில் சூப்பர் ஸ்டார் மகள்

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (19:11 IST)
வம்சி பைடிபைலி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அவருக்கு  ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின்  ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய்யின் 66 வது  படத்தை வம்சி பைடிபைலி இயக்கவுள்ளார். இப்படத்தில் வில்லு படத்திற்குப் பிறகு விஜய்யுடன் பிரகாஷ்ராஜ் நடிக்கவுள்ளார்.

விஜய் நடிப்ப்பில் உருவாகவுள்ள இப்புதிய படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு மகள் சிதாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.  இப்படத்தின் கதை மகேஷ்பாபுவுக்கு பிடித்துள்ளதால் மகலை நடிக்க வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்