விஜய் ஆண்டனியின் ‘கொலை’ சிங்கிள் பாடல் ரிலீஸ்!

வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (17:40 IST)
விஜய் ஆண்டனி நடித்த கொலை திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
 
பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற இந்த பாடல் கடந்த 1964 ஆம் ஆண்டில் சிவாஜி கணேசன் நடித்த புதிய பறவை என்ற படத்தில் இடம் பெற்ற பாடலின் ரீமிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்த இந்தப் படத்தை பாலாஜி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதிரடி ஆக்ஷன் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்