ஏஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி, துப்பாக்கி, கத்தி உள்பட ஒரு சிலதிரைப்படங்கள் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அவர் இயக்கிய முதல் படமான ‘தீனா’ குறித்த இரண்டாம் பாகம் தகவல்களும் வெளிவந்தன.
இந்நிலையில், டோக்கியோ தமிழ்ச்சங்கம் நடத்திய இணையவழி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்த படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்த மாதிரியாக படம் எடுக்க வேண்டும் என்பது குறித்து முறைப்படியான அறிவிப்பு வந்தால் தான் அதுகுறித்து யோசிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.