பாடலாசிரியர் விவேக் விஜயுடன் தன்னுடைய அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார். விஜய் 61 படத்தில் இரண்டு பாடல்கள் எழுதினேன். ஒரு பாடலுக்காக நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்கே சென்றேன். புன்சிரிப்புடன் வரவேற்ற நடிகர் விஜய், எனது முந்தைய வேலைகளுக்காக பாராட்டினார். பிறகு நடிக்க சென்றுவிட்டார்.
கையில் கத்தியுடன் சண்டைப்போட்டு ஒரே டேக்கில் ஸ்டண்டை முடித்துவிட்டார். அதை நான் கவனித்து கொண்டிருந்தேன். அவர் மீண்டும் வந்தபோது, அவரிடத்தில் இப்படி ஒரே டேக்கில் முடித்துவிட்டீர்கள் என கேட்டேன். உடனே அவர் நீங்கள் எப்படி சரியான வார்த்தைகளை போட்டு அழகான பாடல்களை கொடுக்கிறீர்கள் என திருப்பி கேட்டார்.