''விஜய்க்கு ஹாலிவுட் ரீமேக் செட் ஆகாது''...ரசிகரின் கருத்துக்கு வெங்கட்பிரபு பதிலடி

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (13:46 IST)
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’G.O.A.T  படம் பற்றி ஒரு ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும்  படம் விஜய்68. 
 
இப்படத்தில் விஜய்யுன் இணைந்து, நடிகர்  பிரஷாந்த், பிரபுதேவா, யோகிபாபு, லைலா, சினேகா உள்ளிட்டோர் நடித்து வரும் நிலையில் இப்பட ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது.
 
இந்த நிலையில்  நேற்று மாலை இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
 
இந்த படத்திற்கு  ’G.O.A.T’ - The Greatest Of All Time என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த   நிலையில், இன்று புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் 2 வது லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என்று தயாரிப்பு    நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில், ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெங்கட்பிரபுவை டேக் செய்து சில கருத்துகள் கூறியுள்ளார்.
 
அதில், ''2023  ஆம் ஆண்டு  நடிகர் விஜய் வாரிசு, லியோ பட தோல்வியால் துவண்டுள்ளார். அவர் 2024 ஆம் ஆண்டி வெற்றியை எதிர்பார்த்துள்ளார். ஹாலிவுட் படத்தை விஜய்க்காக இயக்க திட்டமிட்டிருந்தால், அதற்கு விஜய் பொருத்தமானவர் இல்லை என நினைக்கி -றேன்.  தெலுங்கு ரீ  மேக் படங்கள் தான் அவருக்கு   நன்றாக் இருக்கும்'' என்று தன் கருத்தை கூறியிருந்தார்.
 
இதற்குப் பதிலளித்த வெங்கட்பிரபு, ''சகோதரரே மன்னித்துக் கொள்ளுங்கள். நான் உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன். அன்பைப் பகிரலாம்.... புத்தாண்டு வாழ்த்துகள் ''என்று தெரிவித்துள்ளார்.
 
வெங்கட்பிரபு  மங்காத்தா, மாநாடு ஆகிய ஹிட் படத்தை இயக்கியிருந்ததால், GOAT படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்