''வாரிசு'' படம் 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல்- தில்ராஜூ தகவல்

திங்கள், 23 ஜனவரி 2023 (14:28 IST)
பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியானது.

இப்படத்தில் இவருடன் இணைந்து ராஷ்மிகா, குஷ்பு,  பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், ஸ்ரீகாந்த்  உள்ளிட்ட  நடிகர்கள் நடித்திருந்தனர்.

இப்படத்தை வம்சி இயக்கினார், தமன் இசையமைத்திருந்தார்.  தெலுங்கு தயாரிப்பாளர்  தில்ராஜு தயாரித்துள்ளார்.

கூட்டுக் குடும்பத்தின் முக்கியவத்தை வலியுறுத்துகிற படமாக உள்ளதால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் விருப்பத்திற்குரிய படமாக உள்ளது.

தற்போதும் உலகம் முழுக்க உள்ள தியேட்டர்களில் வாரிசு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

 ALSO READ: ''வாரிசு'' படம் 7 நாட்களில் ரூ.210 கோடி வசூல்- தில்ராஜூ தகவல்

இந்த நிலையில்.  இப்படம் வெளியான 11   நாட்களில் உலகம் முழுவதும் ரூ.250  கோடி வசூல் குவித்துள்ளதாக  தில்ராஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Podra bgm ah

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்