'வலிமை’ ரிலீஸ் உரிமையை வாங்கிய ‘மாநாடு’ விநியோகிஸ்தர்!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (14:57 IST)
தல அஜித் நடித்து முடித்துள்ள 'வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது
 
இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெறுவதற்கு ஒவ்வொரு மாவட்ட விநியோகஸ்தர்களும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் உரிமை மிகப்பெரிய தொகைக்கு கைமாறி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது
 
ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு ஏரியாவை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது கோவை ஏரியாவில் ரிலீஸ் உரிமையை சுப்பையா என்பவர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இவர்தான் ஏற்கனவே தமிழகம் முழுவதும் மாநாடு படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 'வலிமை’ திரைப்படத்தின் கோவை உரிமையை இதுவரை எந்த படத்திற்கும் கொடுக்காத மிகப்பெரிய தொகையை சுப்பையா கொடுப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்