பஹத் பாசில் & வடிவேலு இணையும் அடுத்த படம்… லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (14:40 IST)
மாமன்னன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றது. படத்தில் நடித்த வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகிய இருவரின் நடிப்பும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

இந்த வெற்றிக்குப் பிறகு இப்போது ஃபஹத் பாசில் மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்