சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்திற்கு வந்த திடீர் சிக்கல்!

வெள்ளி, 17 ஜனவரி 2020 (22:13 IST)
சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாக இருக்கும் வாடிவாசல் குறித்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது அனைவரும் அறிந்ததே
 
இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் நடித்து முடித்த பின்னர் சூர்யா ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார் என்பதும், அதற்குள் வெற்றிமாறன், சூரி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது திடீரென ‘வாடிவாசல்’ என்ற படத்தின் கதை தன்னுடையது என இயக்குனர் ஒருவர் போர்க்கொடி தூக்கி உள்ளதாகவும் இது குறித்த பஞ்சாயத்து நடைபெற்று வருவதாகவும் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
ஏற்கனவே ‘வாடிவாசல்’ என்ற நாவலை மையமாக வைத்துதான் வெற்றிமாறன் இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் திடீரென உதவி இயக்குனர் ஒருவர் போர்க்கொடி தூக்கியுள்ளது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்