வாய்தா பட கதாநாயகி தீபா தற்கொலை

ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (14:52 IST)
மகிவர்மன் என்பவர் இயக்கத்தில் உருவான வாய்தா திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் தீபா. இவர் துப்பறிவாளன் உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவர் சென்னையில் தான் வசித்துவந்த விருகம்பாக்கம் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த தீபாவுக்கு 29 வயது. இவரது தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்