உலிதவரு கண்டெந்தே ரீமேக்கில் நிவின் பாலியுடன் நட்டி

புதன், 15 ஜூன் 2016 (13:04 IST)
சதுங்க வேட்டை படத்தைத் தொடர்ந்து, போங்கு என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் நட்டி. அவரை கன்னடப் படமான உலிதவரு கண்டெந்தேயின் தமிழ் ரீமேக்கில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.


 
 
உலிதவரு கண்டெந்தே படத்தை தமிழில் மிஷ்கினின் உதவி இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கி வருகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார். இந்தப் படம் பல்வேறு கதைகளின் தொகுப்பு. 
 
பல கதாபாத்திரங்கள் சம அளவில் வருகின்றன. கன்னடத்தில் கிஷோர் நடித்த வேடத்துக்காக நட்டியை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த வேடத்தில் நடிக்க முதலில் பரிசீலிக்கப்பட்டவர் சசிகுமார். அவர் நடித்தால் கதாபாத்திரத்தின் தன்மையை ரசிகர்கள் எளிதாக யூகித்துவிடுவார்கள் என நட்டியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
தூத்துக்குடி அருகிலுள்ள கடலோர கிராமத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்