உதயநிதியின் புதிய பார்ட்னர் சூரி

செவ்வாய், 5 ஜூலை 2016 (12:31 IST)
உதயநிதி எழில் இயக்கத்தில் ஒரு படத்திலும், கௌரவ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.


 


இந்த இரு படங்களிலும் அவருடன் சரிக்கு சமமாக கலக்கவிருப்பது, காமெடி நடிகர் சூரி.
 
உதயநிதியின் படங்கள் சுமாராகப் போகிறது என்றால் அதற்கு காரணம், அவருடன் நடிக்கும் காமெடி நடிகர்கள். முக்கியமாக சந்தானம். இப்போது சந்தானம் ஹீரோவாகிவிட்டதால் அவரது இடத்தை சூரியை வைத்து நிரப்புகிறார்.
 
எழிலின் அனைத்துப் படங்களிலும் சூரிதான் காமெடி. அதிலும் வேலைன்னு வந்துட்ட வெள்ளக்காரனில் சூரி, ரோபோ சங்கர் காமெடிதான் படத்தை காப்பாற்றியது. உதயநிதியை வைத்து இயக்கும் படத்திலும் இந்த இருவர் பிரதானமாக வருகிறார்கள்.
 
கௌரவ் இயக்கும் படத்திலும் ஹீரோ உதயநிதிக்கு இணையாக வருகிறாராம் சூரி. சைடு டிஷ் ஸ்ட்ராங்காக இருந்தால்தான் மெயின் டிஷ்ஷை ரசிகர்கள் தொடுகிறார்கள் என்பதை உதயநிதி நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்