பெங்களூரில் ட்ரெவர் நோவாவின் நிகழ்ச்சி ரத்து.. ஏ.ஆர்.ரஹ்மான், லியோவை அடுத்து இன்னொரு ஏமாற்றம்..!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (09:34 IST)
ஏஆர் ரகுமான் நடத்திய மறக்குமா நெஞ்சம் என்ற நிகழ்ச்சியில் மிகப்பெரிய சொதப்பல் ஏற்பட்டதன் காரணமாக பார்வையாளர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். இதனை அடுத்து செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெற இருந்த லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒரு சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் நேற்று பெங்களூரில் நடந்த ட்ரெவர் நோவாவின் காமெடி நிகழ்ச்சி தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் 
 
புகழ்பெற்ற நகைச்சுவை கலைஞரான ட்ரெவர் நோவாவின் காமெடி நிகழ்ச்சி நேற்று பெங்களூரில் நடந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 
 
பல்வேறு முயற்சிகள் செய்தும் ஆடியோ சரியாக கேட்கவில்லை என்றும் இதனால் ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் ரசிகர்களின் பணம் திருப்பி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம், லியோ இசை வெளியீடு அடுத்து இன்னொரு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்