கிழிந்த ஜீன்ஸ், டைட் பேண்ட் இனிமேல் அணியக் கூடாது! மீறினால் தண்டனை !

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (18:10 IST)
சர்வாதிகாரத்திற்குப் பெயர் போன வடகொரியாவில் இனிமேல் கிழிந்த மாடல் மற்றும் டைட் பிட் பேண்டுகளை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவில் கிம் ஜாங்கின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் மேற்கத்திய நாடுகளில் பரவிவரும் கலாச்சார வகை ஆடைகளை அனுமதிப்பதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதாவது, கிழிந்த ஜீன்ஸ், இறுக்கமான பேண்ட், பென்சில் பிட் வகையான பேண்டுகளை ஆண் , பெண் இருவரும் அணியத் தடை விதிக்கப்படுவதாகவும் அதேபோல் தலைக்கு கலர் டை பயன்படுத்தவும் தடைவிதித்துள்ளார்.

மேலும், வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங்கால் அனுமதிக்கப்பட்டுள்ள 215 வகையான ஹேச் ஸ்டைல்களில் மட்டுமே வைக்க வேண்டும் இதைத்தாண்டி வேறு வகையான ஹேர் ஸ்டைல் வைத்தால் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்