துணிவு படத்தை வாங்கியுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளது. புறநகர் பகுதிகளில் கூட பல திரையரங்குகள் பொங்கலுக்கு தங்கள் தியேட்டரில் துணிவு ரிலீஸ் ஆவதை உறுதி செய்துள்ளனர்.
படத்தின் வியாபாரம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலமாக நடந்துள்ளதாம். தொலைக்காட்சி உரிமை மற்றும் சேட்டிலைட் உரிமை என அனைத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் விற்றுக் கொடுத்துள்ளதாம். இதனால் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தின் வெளிநாட்டு உரிமையை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றிய லைகா நிறுவனம், இப்போது அதை தனித்தனி நாடுகளுக்கு பிரித்து விநியோகம் செய்து வருகிறது.