இந்த நிலையில், சென்னை ஓமந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போண்டாமணி, ஒரு பிரபல சேனலுக்குப் அவர் பேட்டியளித்துள்ளார். அதில், ஒரு படத்தில் நிஜ சாக்கடையில் குதித்ததால்தான் முதலில் நுரையீரல் பாதிக்கப்பட்டு, அதன் பின் பல பிரச்சனைகளைச் சந்தித்ததாகவும்,தற்போது இரண்டு இரண்டு சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரையும் சிரிக்க வைத்த எனக்கு இந்த நிலைமை வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், சினிமாவில் நடித்த நான் இதுவரை எனக்கென்று ஒன்றும் சேர்த்திவைக்கவில்லை என்றும், எனக்கு மக்களும், முதல்வர் ஸ்டாலினும் உதவி செய்ய வேண்டுமென போண்டாமணி வேதனையுடன் கூறியுள்ளார்.