இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்குத்தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு, இன்று மனுதாக்கல் செய்தார். அதில், தனது அசையும் அசையா சொத்துகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
தனது பெயரில் 18 கோடி ரூபாயில் அசையா சொத்துகள் இருப்பதாகவும், பார்ச்சூனர், டொயோட்டா, மாருதி ஸ்விப்ட் போன்ற கார்கள் உள்ளதாகவும், தங்க நகைகள் 8.55 கிலோ உள்ளதாகவும், வெள்ளி 78 கிலோ பொருட்கள் என 4.55 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மொத்தம் 22.55 கோடி சொத்துகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.